மிஷ்கினின் ‘அஞ்சாதே’ படத்துல இப்படி ஒரு தவறு நடந்ததா?… பல வருடம் கழித்து வெளியான தகவல்!

By vinoth on பங்குனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின்  சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

   

அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.

   

 

தற்போது சமீபகாலமாக படங்களின் எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைவது வெகு சாதாரணமாக நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் டிஜிட்டல் வடிவில் மாறியது என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய பில்ம்கள் பெரிய பெட்டிகளில் பத்திரமாக சேமிக்கப்படும். ஆனால் தற்போது கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் வர ஆரம்பித்ததால் இந்த தவறு நடப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்திலேயே படமாக்கப்பட்ட பிலிம் சுருள்கள் காணாமல் போயுள்ளன என்றால் நம்ப முடிகிறதா? ஆம். நரேன் சம்மந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த பில்ம் சுருள்கள் காணாமல் போக மீண்டும் படமாக்கி உள்ளனர் என்று சினிமா பத்திர்க்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.