ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.
அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் இப்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் நடிகராக 25 படங்களுக்கு மேல் நடிகராகவும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் அவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் அவர் தன்னுடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ததுதான். அவர் பிரபல நடிகை திவ்யபாரதியை காதலிப்பதால்தான் சைந்தவியை விவாகரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருவருமே மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜி வி பிரகாஷ் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய தந்தை தனக்கு அளித்த இரண்டு முக்கியமான ஆலோசனைகளை தான் கேட்க தவறியதாகக் கூறியுள்ளார். அதில் “என்னுடைய அப்பா என்னை இவ்வளவு இளம் வயதில் இசையமைப்பாளர் ஆகாதே என்றார். வெயில் படத்தின் போது எனக்கு 17 வயதுதான். ஆனால் நான் அந்த அட்வைஸைக் கேட்கவில்லை.
அதே போல மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளாதே என்றார். ஆனால் நான் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததால் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
