கங்குவா தோல்வியை தொடர்ந்து சூர்யா எடுத்த திடீர் முடிவு… நஷ்டத்தை ஈடுகட்ட மேலும் பெரிய ரிஸ்க் எடுக்கிறாரே..?

By Nanthini on மாசி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்து இருந்தார். படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அத்துடன் கங்குவா படத்திற்காக மிகப்பெரிய உழைப்பையும் சூர்யா போட்டிருந்தார்.

கங்குவா'வை கதறவிடும் நெட்டிசன்கள்! | Netizens negative reviews on Kanguva -  hindutamil.in

   

ஆனால் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. வசூலிலும் மிகப்பெரிய அடிவாங்கி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகின்றார். இந்த நிலையில் கங்குவா தோல்வியை சரிகட்டும் விதமாக சூர்யா தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கங்குவா படத்தால் நஷ்டம் அடைந்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க சூர்யா உத்திரவாதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

   

தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா | Suriya to act in Telugu film

 

இந்த படங்களின் இயக்குனர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி இயக்குனர்களின் பெயர்கள் சூர்யாவின் இந்த படங்களின் லிஸ்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா தற்போது வாக்குறுதி கொடுத்திருந்தாலும் அடுத்தாண்டு தான் இதில் ஒரு படம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா இந்த திரைப்படத்தை முடித்த கையோடு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் தற்போது சூர்யா பிஸியாக நடித்து வருகிறார்.

KE Gnanavel Raja: சிம்பு பட இயக்குனருடன் இணைந்து பாலிவுட்டில் என்ட்ரி  கொடுக்கும் ஞானவேல் ராஜா..ஹீரோ இவர்தானாம்..! - studio green ke gnanavel raja  entry in bollywood ...

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் திரைப்படத்தில் நடிக்கவும் சூர்யா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.