தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றோ அல்லது அவுட்டேட் ஆகியோ வெளியேறிவிடும் நிலையில் மணிரத்னம் தன்னுடைய 70 ஆவது வயதிலும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார்.
மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.
அதன் பின்னர் அவருக்கு என்று பிராண்ட் வேல்யூ உருவானது. நாயகன், தளபதி என அடுத்தடுத்து அவரின் கிராஃப் எகிறிக் கொண்டே சென்றது. ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். அதனால் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல பெயர் உருவானது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இடையில் அவருக்கு பல வருடங்களாக ஹிட் இல்லாமல் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலமாகக் கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து தோல்விப் படமாகக் கொடுத்தாலும் தமிழ் இயக்குனர்களில் அதிகம் மதிக்கப்படும் இயக்குனராக மணிரத்னம் இன்றளவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மணிரத்னம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
அதில் “நாம் மணிரத்னத்தைப் பார்க்கப் போனால் வரவேற்கும் விதமாக முதல் தடவை சிரிப்பார். நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் இரண்டாவது தடவை சிரித்தால் ‘சரி கிளம்புங்க’ என்று சொல்கிறார் என்று அர்த்தம். அதை நாம் புரிந்துகொண்டு வெளியே போகவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
