வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் சுசீந்திரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதன்படி இவர் சிம்புவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்புவுக்கு இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து பாயும் புலி, வில் அம்பு, கென்னடி கிளப் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் இறுதியாக டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாண்டியநாடு திரைப்படம் உருவான விதம் குறித்து பேசி உள்ளார். அதில், பாண்டியநாடு கதை எழுதும்போது ஒரு சாதாரண அதாவது எண்ணெய் மாதிரி இருக்கக்கூடிய ஒரு ஆளை நினைவில் வைத்து தான் எழுதினேன். முதலில் பாண்டியநாடு கதையில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது.

அதில் விக்ராந்த் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே வளர்ந்து வரக்கூடிய நடிகர்களாக இருந்ததால் தயாரிப்பாளர்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு விஷாலிடம் கதை சொன்னதும், கதை நன்றாக தான் உள்ளது ஆனால் நான் ஒரு பயந்தாங்கோலியாக நடிக்கிறனே இதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார். உடனே நான் அதற்காக ஆரம்பத்தில் ஒரு காட்சியை நான் வைத்திருக்கிறேன் எதற்கு ஊர் வம்பு வேண்டாம் என்று டயலாக் பேசுவது போல இருக்கும் என்று கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். ஒருவேளை சிவகார்த்திகேயன் பாண்டியநாடு படத்தில் நடித்திருந்தால் அந்த காட்சியை தேவைப்பட்டு இருக்காது.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண நாள் இவனால் யாரையும் அடிக்க முடியாது என்பதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அதற்கு சப்போர்ட் பண்ண தான் விக்ராந்த் என்ற ஒரு கேரக்டரை பக்கத்தில் வைத்திருந்தேன். பொதுவாகவே சினிமாவில் ஹீரோ காமெடியனாக நடிக்கக்கூடிய நண்பருக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் போய் சண்டை போடுவது தான் வழக்கம். ஆனால் நான் அதற்கு மாறாக ஹீரோ பயந்தவன் மாதிரி இருப்பது போலவும் ஹீரோவோட நண்பன் விக்ராந்த் தனது நண்பனுக்காக சண்டை போடுவதை காட்டி ஹீரோவை காமெடியனாகவும், ஹீரோவின் நண்பனை நிஜ ஹீரோவாகவும் படத்தில் காட்டி இருந்தேன் என சுசீந்திரன் பாண்டியநாடு படம் குறித்து பேசி உள்ளார்.
