SK பிறந்தநாள் ஸ்பெஷல்… அதிக வசூல் செய்து சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்திய 5 படங்கள்..!

By Nanthini on மாசி 17, 2025

Spread the love

ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவக்கார்த்திகேயன். இவர் முதன் முதலில் மெரினா திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து டாக்டர், டான், மாவீரன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் இறுதியாக அமரன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நிரூபித்து காட்டியுள்ளார். மெல்ல மெல்ல வளர்ந்து இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திரை விமர்சனம்: அமரன் | Amaran Tamil Movie Review - hindutamil.in

   

அமரன்:

   

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அதிக வசூல் செய்த திரைப்படம் தான் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷல் ஆக வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 330 கோடி வசூலை ஈட்டியது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

டான் திரைவிமர்சனம்

டான்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டான் திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்த நிலையில் அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்திருந்த நிலையில் இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சுமார் 125 கோடி வசூலித்தது.

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியீடு?

டாக்டர்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்த திரைப்படம் தான் டாக்டர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 102 கோடி வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

Velaikkaran review. Velaikkaran Kannada movie review, story, rating -  IndiaGlitz.com

வேலைக்காரன்:

நடிகர் ரவி மோகன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேலைக்காரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 87 கோடி வசூல் செய்தது.

3 நாட்களில் மாவீரன் படம் இத்தனை கோடி வசூலா| Sivakarthikeyan s Maaveeran  movie box office collection day 3

மாவீரன்:

சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் மாவீரன் திரைப்படமும் ஒன்று. மடோன் அஸ்வின் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 81 கோடி வசூல் செய்துள்ளது.