இயக்குனர் KS ரவிக்குமாரை சந்திக்க மாறுவேடத்தில் வந்த ரஜினிகாந்த்… என்ன காரணம் தெரியுமா..?

By Nanthini on மாசி 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் தான் கே எஸ் ரவிக்குமார். விக்ரமின் உதவியாளரான இவர் புரியாத புதிர் என்ற திரைப்படம் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சேரன் பாண்டியன் திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவருடைய படங்களில் ஹீரோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகவே இருப்பார். பெரும்பாலும் சரத்குமார் தான் அந்த வேடத்திலும் நடிப்பார். இவர் இயக்கிய நாட்டாமை திரைப்படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போக அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அதன் பிறகு உருவான திரைப்படம் தான் முத்து.

கே எஸ் ரவிக்குமாரின் 12 படத்தில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் இவர்தான்.. ரஜினி  கமலை விட ஒஸ்தியாம்! - Cinemapettai

   

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக படையப்பா படத்திலும் இருவரும் இணைந்தனர். அதன் பிறகு லிங்கா திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு ராணா என்ற திரைப்படம் உருவானது.  இப்படி பல திரைப்படங்களில் ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படியான நிலையில் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி பற்றி ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு படம் குறித்து பேசுவதற்காக பெங்களூருக்கு வாங்க அங்க இருக்க என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல பேசலாம் என்று ரஜினி சார் என்ன கூப்பிட்டு இருந்தாரு. நானும் சரின்னு கிளம்பி போயிட்டேன்.

   

Director Ks Ravikumar Reveals The Father Rajini Name In Muthu

 

 

அங்க போனதும் ஹோட்டலில் உங்களுக்கு ரூம் புக் பண்ணி இருக்கேன் அங்க போய் ரெடி ஆயிட்டு எனக்கு ஒரு போன் பண்ணுங்க என்று சொன்னாரு. திரும்ப அவரே போன் பண்ணி ரெடியாயிட்டீங்களா என்று கேட்டார். ரெடி ஆகிட்டேன் என்று சொன்னதும் நான் கீழ தான் இருக்கேன் வாங்க அப்படின்னு கூப்பிட்டாரு. நீங்க எதுக்கு சார் வந்தீங்க டிரைவர் மட்டும் அமைச்சிருந்தா நானே வந்து இருப்பேன் என்று அவர் கிட்ட சொன்னதும் பரவால்ல நான் கீழ தான் இருக்கேன் வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன் என்று ரஜினி சார் சொன்னாரு.

படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து  பாராட்டிய ரஜினி...

ஐயோ ரஜினி சாரே நம்பள கூட்டிட்டு போக வந்திருக்காரு என்று அவசர அவசரமா கீழே போய் பார்த்தா அவர் எங்கேயுமே காணோம். நானும் தேடிகிட்டு இருந்தா ஒரு வயசான தாத்தா பக்கத்துல வந்து வாங்க போலாம்னு சொன்னாரு. நானும் யாருன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நான் தான் வாங்க ரவி போகலாம் என்று ரஜினி மாறுவேடத்தில் வந்து கூட்டாரு. நானும் அத பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்ட என்று பெங்களூரில் நடந்த ஒரு சம்பவத்தை கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்