தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர், வாரி வழங்கும் வள்ளல் தனக்கு யாராவது ஏதேனும் செய்துவிட்டால் அதை எத்தனை வருடமானாலும் அந்த செய்நன்றி மறவாமல் இருப்பவர் எம்.ஜி.ஆர். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஒருமுறை எம்ஜிஆர் திருநெல்வேலி பக்கம் சென்று காரில் வரும் பொழுது கார் நடுஇரவில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. அந்நேரத்தில் பெட்ரோல் கிடைக்காது என்பதால் அங்கு ஒரு குடிசையில் இருந்த மூதாட்டி வீட்டில் எம்ஜிஆர் தனது டிரைவருடன் தங்கினார். அந்த மூதாட்டி தான் வைத்திருந்த பழைய கஞ்சியையும் சுட்ட கருவாட்டையும் எம்ஜிஆரின் பசிக்காக கொடுத்தார். அந்த மூதாட்டி இடம் நன்றி சொல்லி எம்ஜிஆர் திரும்ப வந்துவிட்டார்.
ஒரு 20 வருடங்கள் கழித்து அதே ஊரில் இருந்த சில ரசிகர்கள் எம்ஜிஆரை காண வந்திருந்தனர். அப்போது அந்த மூதாட்டியை பற்றி எம்ஜிஆர் விசாரித்திருக்கிறார். அப்போது அங்கே வந்த நபர்கள் அந்த மூதாட்டி பாவம் வறுமையில் கஷ்டப்படுகிறார். அவரது பிள்ளைகள் கூட கண்டுகொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்கள். உடனே வீட்டிற்குள் சென்ற எம்ஜிஆர் பணக்கட்டுகளை எடுத்து ஒரு சால்வையில் சுற்றி இதை அந்…