தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் “முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி” என்ற ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு முன்பே வெளிநாடுகளில் படம் ரிலீஸாகி அங்குள்ள ரசிகர்கள் படத்தை முதல் காட்சியே பார்த்துவிட்டு விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் பெரும்பாலானவை நேர்மறையான விமர்சனங்களாகவே வந்துகொண்டிருக்கின்றன. அப்படி வெளியான சில ரசிகர்களின் கருத்துகளைப் பார்க்கலாம்.
- முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை. படத்தின் வெற்றிக்கு கண்டெண்ட்தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அஜித்துக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். த்ரிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- படத்தை சிறப்பாகக் கொண்டு செல்கிறது அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும். அஜித்தின் முந்தைய படங்கள் போல இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.
- சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் அளவுக்கு சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.கண்டிப்பாக தியேட்டரில் பாருங்கள். ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும்.
- முழு அன்லிமிடெட் சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.
- இது தேய்வழக்கான மசாலா படம் இல்லை. அழுத்தமான உணர்வுகளைக் கொண்ட திரைக்கதை. அதே நேரம் விறுவிறுப்பாகவும் இருந்தது.
என பாசிட்டிவ் விமர்சனங்களாகக் குவிந்து வருகின்றன. எனினும் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள்தான் பார்ப்பார்கள் என்பதால் நடிகர் மேல் ப்ரியத்தில் மிகைப்படுத்தி சொல்வதும் நடக்கும் என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் இன்னும் தெளிவான நிலை புரியும்.
