உதயநிதி சினிமாவை விட்டு அரசியலுக்கு போனது எனக்கு வருத்தம்… நடிகை ரெஜினா ஷேரிங்ஸ்..!

By Soundarya on பிப்ரவரி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் பிரபலமான நடிகை தான்.

   

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய கேள்விக்கு 2020 ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது, அதிலிருந்து வெளியேற சிறிது நாட்கள் ஆனது, தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

   

 

இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார்  தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இவர் முன்னதாக “சரவணன் இருக்க பயமேன்” என்ற படத்தில் உதயநிதியோடு நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரெஜினா உதயநிதி குறித்து பேசி இருந்தார்.

அதில், ” சரவணன் இருக்க பயமேன் படத்தில் “எம்புட்டு இருக்குது ஆசை உன்மேல..” என்ற பாடலின் மூலம் தான் நான் பிரபலம் அடைந்தேன். உதயநிதி சினிமாவை விட்டு அரசியலுக்கு போனது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. இன்னும் நிறைய படங்களை நடித்திருந்தால் ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்திருக்கும்” எனவும் கூறியுள்ளார்.