நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் தானே தெரியும்… சி.ஆர் சரஸ்வதி குறித்து இந்த விஷயம் தெரியுமா..?

By Soundarya on மாசி 1, 2025

Spread the love

ச.ஆர் சரஸ்வதி ஒரு நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இவரை நம்மில் பல பேருக்கு தெரியும். ஆரம்ப காலகட்டத்தில் பாக்யராஜ் ரசிகர் மன்றத்தில் இணைந்து செயல்பட்டு கொண்டிருந்தவரை பாக்கியராஜ் 1979 ஆம் ஆண்டு தனது சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகையாக அறிமுகப்படுத்த அதன் பின் பாக்கியராஜ் ரசிகர் மன்ற தலைவியாக உயர்ந்து 8 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

   

மீண்டும் பாக்கியராஜ் தனது” எங்க சின்ன ராஜா” படத்தில் நாகாம்பாள் எனும் தனது அம்மா கதாபாத்திரத்தை இவருக்கு வடிவமைத்து கொடுத்தார். அந்த திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்த அப்போதைய தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார் சி.ஆர் சரஸ்வதி.

   

 

பின் ஒரு நடிகையாக அண்ணாநகர் முதல் அமைதிப்படை,. சிங்காரவேலன், சொக்கத்தங்கம் என ஐம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. 2008 ஆம் ஆண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் இதற்கு முன் அதிமுகவிலும் தற்போது அமமுகவிலும் இணைந்து தனது அரசியல் பணி ஆற்றி வருகிறாரார்.