சினிமாவில் இருந்து விலகுகிறாரா அதிதி?.. ரசிகர்களின் தலையில் பேரிடியை இறக்கிய ஷங்கர்..!

By Nanthini on மாசி 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். அவருடைய மகள் அதிதி சங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அதிதி சங்கர் படங்களில் சில பாடல்களை பாடி பின்னணி பாடகி ஆகவும் பலம் வந்தார்.

சினிமாவுக்கு நோ, அப்பா போட்ட கண்டிஷன்.. அதிதி ஷங்கர் உடைத்த ரகசியம்

   

இதனைத் தொடர்ந்து முரளியின் மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் அதிதி நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிதி சினிமாவிற்கு வருவதற்கு தன்னுடைய அப்பா போட்ட கண்டிஷன் குறித்து பேசி உள்ளார். அதில், மருத்துவருக்கு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பு முடிந்ததும் நடிப்பேன் என கூறி இருந்தேன்.

   

Latest News Aditi Shankar Talks About Condition By Her Father Director  Shankar Before Debuting In Cinema | அதிதி ஷங்கருக்கு அவரது அப்பா போட்ட  கண்டீஷன் என்ன தெரியுமா Movies News in Tamil

 

அதற்கு என்னுடைய அப்பா ரொம்ப யோசித்து கடைசியாக ஒரு கண்டிஷன் போட்டார். நான் சினிமாவில் ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் மருத்துவப் பணிக்கு சென்று விட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன் என்று அதிதி கூறியுள்ளார். இப்படியான நிலையில் அதிதி சங்கர் சினிமாவில் தோல்வியை சந்தித்ததால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது தன்னுடைய அப்பாவின் கண்டிஷனுக்கு ஏற்றது போல சினிமாவில் இருந்து விலகுவாரா என்பது இனிதான் தெரிய வரும். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது