அந்த திறமையான பாடல் ஆசிரியரை மட்டும் முற்றாக ஒதுக்கிய இளையராஜா… ரசிகர்களுக்குதான் இழப்பு!

By vinoth on மாசி 1, 2025

Spread the love

 

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தன்னுடைய முதல் சிம்ஃபொனியான ‘valient’ என்பதை உருவாக்கி இசையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

   

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா தன் பாடல்களுக்காக நூற்றுக்கணக்கான பாடல் ஆசிரியர்களோடு பணியாற்றியுள்ளார். அதில் அவருடன் இணைந்து மிகச் சிறப்பான பாடல்களைக் கொடுத்த வைரமுத்துவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரிந்தார்.

 

ஆனால் மற்ற அனைத்து பாடல் ஆசிரியர்களும் அவர் மேல் அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர். 2000 களுக்குப் பிறகு நிறைய இளம் பாடல் ஆசிரியர்களோடு அவர் இணைந்து பணியாற்றினார். ஆனால் தாமரையோடு மட்டும் அவர் ஒரு பாடல்கள் கூட இணைந்து பணியாற்றவில்லை. அது ஏன் என்பது இன்றுவரை ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

1990களின் பிற்பகுதியில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய தாமரை தேவா, ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார்  மற்றும் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து அதிகளவில் பணியாற்றியுள்ளார். 1000க்கும் மேற்பட்ட பாடல்களை ஆங்கிலக் கலப்பு வார்த்தைகள் இல்லாமல் எழுதியுள்ளார்.