நான் அழுதுகிட்டே தான் அந்த படத்தோட கதையை எழுதின.. தியேட்டர்ல படம் பாக்க மொத்தமே 8 பேர் தான் வந்தாங்க.. இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..!

By Nanthini on தை 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின்  சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார்.

விஷாலுக்கு மிஷ்கின் 15 நிபந்தனைகள்... இணையத்தில் வைரலாகும் நகல்... |  nakkheeran

   

இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இறுதியாக இவர் வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் மிஸ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் கதையை எழுதும் போது பல காட்சிகளுக்கு நான் அழுதுவிட்டேன். இந்த படத்தில் ரொம்ப ஆத்மாத்மாவாக மனசுக்கு நிறைவாய் எல்லா விஷயங்களையும் பண்ணிட்டேன். பென்சிலில் தான் படத்தின் கதையை எழுதினேன்.

   

பாவனாவுடன் பலான உறவு!.. வெளிப்படையாக பேசிய மிஷ்கின்.. அப்பவே அவர்  அப்படித்தான்!...

 

கிளைமாக்ஸ் காட்சி உட்பட பல சீன்களில் நான் ரொம்பவே அழுதுட்டேன். எனக்கு ஒரு சின்ன நம்பிக்கை இருந்துச்சு. இந்த படம் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் மனதை தொட்டுவிடும் என்று நம்பினேன். முதலில் ஒரு காதல் கதையாக எடுத்த படம் பிறகு பல காட்சிகளை வைத்து வேறு விதமாக பண்ணி இருந்தோம். முதல் நாள் சங்கரன் தியேட்டரில் படம் பார்க்கும்போது வெறும் எட்டு பேர்தான் இருந்தாங்க. அத பாத்து என்னோட அசிஸ்டன்ட் எல்லோருமே ரொம்ப சோர்வாகிட்டாங்க. உடனே அவங்கள அந்த எட்டு பேர் கிட்டயும் போயி படம் எப்படி இருக்குன்னு கேட்க சொன்ன. எட்டு பேருமே படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அடுத்த சோவில் 14 பேர் இருந்தாங்க. மூணு நாளில் படத்தையே தியேட்டர்ல இருந்து எடுத்துட்டாங்க. பிறகு தேவி தியேட்டரில் படத்தை வாங்கி போட்டாங்க. படம் சூப்பர் ஹிட் ஆச்சு. அத பாத்து ரொம்ப வே சந்தோஷப்பட்ட என்று மிஸ்கின் பேசியுள்ளார்.