விஜய்க்கு கொடுத்தது தான் எனக்கும் வேணும்… ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த கவின்… ஷாக்கில் கிஸ் படக்குழுவினர்..!

By Soundarya on தை 30, 2025

Spread the love

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

   

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பின்னர் டாடா படத்தில் நடித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், சிவபாலன் இயக்கத்தில் பிளடி பக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

   

 

இந்த படம் தீபாவளிக்குநேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கவின் பிச்சைக்காரன் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து, கவின் கிஸ் படத்தில் நடித்து வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கவின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “கிஸ் படப்பிடிப்பில் கேரவனுக்கு பிரச்சினை செய்துள்ளார் கவின். பெரிய ஹீரோக்களுக்கு கொஞ்சம் அதி நவீன வசதிகளுடன் இருக்கும்.

சின்ன ஹீரோக்களுக்கு அதைவிட குறைவான வசதி கொண்ட கேரவன் கொடுப்பார்கள். அந்தவகையில் விஜய் ஒரு கேரவன் யூஸ் செய்வாராம். அது அதி நவீன வசதிகளோடு சூப்பராக இருக்குமாம். வாடகையும் அதிகம். இதை தான் கவின் கிஸ் படப்பிடிப்பு தளத்தில் விஜய் என்ன கேரவன் பயன்படுத்தினாரோ அதுதான் எனக்கு வேண்டும் என்று அடம்பிடித்தாராம். அந்த கேரவன் இல்லாவிட்டால் நாம இன்னொரு நாள் ஷூட்டிங் வைத்து கொள்ளலாம் என்கிறாராம். கவின் எப்போதுமே தன்னை விஜய் என்று நினைத்து கொள்கிறார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.