தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் விஷால். இவரது தந்தை ஜிகே ரெட்டி சினிமாவில் பணியாற்றிய தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுன் சர்ஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷால் 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, சண்டக்கோழி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் விஷால். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் விஷால். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார் விஷால். 2012 ஆம் ஆண்டு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் ஒரு சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது.
தற்போது இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அந்த திரைப்படம் வெளியாகி 2025 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி நடை போட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படம் ரிலீசுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் மிகவும் உடல் நலம் சரியில்லாமல் கை நடுக்கத்துடனும் உடல் நடுக்கத்துடனும் பேசினார். இதை வைத்து பல நெட்டிசன்கள் கலாய்த்தும் யூடியூபில் அவருக்கு குடிப்பழக்கத்தினால் தான் அப்படி ஆகிவிட்டது என்று தாறுமாறாக பேசி வந்தனர்.

அதற்கு பிறகு மதகஜராஜா பட வெற்றி விழாவில் மிகவும் ஆரோக்கியமாக பேட்டி அளித்து இருந்தார் விஷால். எனக்கு வைரல் ஃபீவர் அதனால் தான் அப்படி இருந்தேன். ஆனால் என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்று கூறினார். அதை தொடர்ந்து youtube இல் சேகுவாரா என்பவரும் அதைத்தொடர்ந்து இரண்டு youtube சேனல்களும் விஷாலின் உடல்நிலையை பற்றி அவதூறு பரப்பியதால் அவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. நடிகர் நாசர் விஷால் சார்பாக கொடுத்த வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
