“ஆமா, நான் அத பண்ணது உண்மைதான்”.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சௌந்தர்யா உடைத்த சீக்ரெட்..!

By Nanthini on தை 24, 2025

Spread the love

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 சமீபத்தில் முடிவடைந்தது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ்.

பிக்பாஸ் சீசன் 8 டைட்டிலை வென்றார் முத்துக்குமரன் / Muthukumaran won the  Bigg Boss tamil season 8 title

   

அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது. 24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர்  இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.

   

Latest News Bigg Boss Season 8 Tamil Title Winner Muthukumaran And Runner  Up Soundariya Nanjundan Prize Money | பிக்பாஸ் 8 வின்னர் முத்துவுக்கு 40  லட்சம் ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை ...

 

இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சௌந்தர்யா அளித்த முதல் பேட்டியில் PR குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், பிக் பாஸ் என்பதை நான் ஒரு படமாக தான் பார்க்கிறேன். எனக்கு ஒண்ணுமே தெரியாத ஒரு விஷயத்தை கொள்ள நான் போகும் போது நான் அதுக்கு ப்ரொமோஷன் பண்ண வேண்டும். எனக்காக மார்க்கெட்டிங் நான் தானே பண்ணிக்க முடியும். மக்கள் மத்தியில் நான் பிரபலமாக வேண்டும் என்றால் எனக்கு தேவை.

Bigg Boss Soundarya: பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17  லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்! - Bigg Boss tamil season 8 contestant  soundarya lost 17 lakhs for scam - Asianet ...

அதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் குடுத்துட்டு வந்தேன். பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் பெட்டி ஓபன் பண்ணும் போது PR என்று பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. அங்க இருந்த எல்லோருமே அதிகமா என்னோட பேர தான் சொன்னாங்க. ஆனா வெளியில வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எல்லோரும் PR வச்சிருந்தாங்க. ஆனா பிக்பாஸ் வீட்ல எல்லாமே என் பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இருந்தாலும் நாம என்னதான் ப்ரமோஷன் பண்ணாலும் மக்களுக்கு நம்மள புடிக்கணும். அவங்க கையில தான் போன் இருக்கு. அவங்களுக்கு நம்மள புடிச்சிருந்தா தான் ஓட் பண்ணுவாங்க என்று சௌந்தர்யா சொன்ன இந்த விஷயம்  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.