பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றோடு முடிவடைந்து விட்டது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ்.

அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது. 24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர் இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.

இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது சௌந்தர்யா நீண்ட நாள் நண்பர் விஷ்ணு வீட்டிற்குள் வந்தார். அப்போது சௌந்தர்யா அவருடைய காதலை சொன்னார். விஷ்ணுவும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில், “எங்க வீட்டுல எங்க அப்பா எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க.

எனக்கு முதன்முதலா அவன்கிட்ட புரபோஸ் பண்ணுறப்ப ஒரு மாதிரி பீல் இருந்துச்சி. எங்க வீட்ல எல்லாருக்கும் எனக்கு அவனை பிடிக்கும்னு தெரியும். என்னோட லவ் மனசுக்குளே வைக்கறதுக்கு அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினச்சேன். அதான் நேரம் பார்த்து சொல்லிட்டேன். சீக்கிரம் குட் நியூஸ் நடக்கும்” என்று கூறியுள்ளார்.
