குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக செஃப் தாமு நடுவராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. கோதண்டராமன் தாமோதரன் என்பது இவருடைய முழு பெயர். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவருடைய வெகுளியான பேச்சு மற்றும் போட்டியாளர்களை அவர் கையாளும் விதம் அவரின் குழந்தைத்தனமான சேட்டை என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஆரம்பத்தில் படிப்பில் பெரிய அளவில் விருப்பமில்லாத காரணத்தால் ஹோட்டல் நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து முதுகலை பட்டம் பெற முடிவு செய்தார். பள்ளி படிப்பையும் மேல்நிலைப் படிப்பையும் சென்னையில் முடித்துவிட்டு பேராசிரியராகவும் பணியாற்றினார்.

பிறகு தாஜ் கோரமண்டலில் சமையல்காரராக பணிபுரிந்தார். இங்கு பணியில் இருந்த நிலையில் பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். இருந்தாலும் இவர் மும்பையின் தாஜ் கோரமண்டலின் திறமையான சமையல்காரர் ஆக மாறினார். தொடர்ந்து 25 மணி நேரம் சமைத்து 617 வகையான உணவுகளை வரிசைப்படுத்தி கின்னஸ் சாதனையும் படைத்தார். கேட்டரிங் துறையில் பிஎச்டி பட்டம் பெற்ற ஒரே சமையல்காரர் ஆக இவர் திகழ்கிறார். தற்போது பல சமையல் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். இவர் கல்லா படம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகராகவும் அறிமுகமானார்.

70 வயதாகும் இவர் முன்னணி செஃப் என்ற பெயரை எடுத்துள்ளார். இந்நிலையில் செஃப் தாமு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கல்யாணத்துக்கு பொண்ணு மாப்பிள்ளை மட்டும் கூட்டிட்டு வந்தா போதும். மத்த எல்லா ஏற்பாட்டையும் நாங்க பண்ணி தருவோம். சாப்பாட்டுல இருந்து, அலங்கார முதல் ஹனிமூன் வரை எல்லாமே எங்க பொறுப்பு. ஒரு டைம் எங்க சாப்பாட்ட சாப்பிட்டா திரும்ப திரும்ப எங்களையே கூப்பிடுவீங்க என்று கூறி Chef Damu’ s Caters and Events என்ற புதிய தொழிலை தொடங்கியுள்ளதாக செஃப் தாமு அறிவித்துள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
