திருமணம் ஆகாமலே முதல் குழந்தை.. 2வது திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தனுஷ் பட நடிகை..!

By Nanthini on தை 23, 2025

Spread the love

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற பதின் வயதில்ருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு வென்றார்.

amy jackson instagram baby bump

   

இவர் உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

   

 

முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஜார்ஜ் என்பவருடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தடபுடலான விருந்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இப்படியான நிலையில் எமி ஜாக்‌ஷன் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோலின் நிறத்தோடு பொருந்திப் போகக்கூடிய உள்ளாடைகளை அணிந்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.