தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் புகழ் பெற்ற நடிகர் சத்யராஜ். கோவையில் பிறந்து வளர்ந்த சத்யராஜ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார். 1970 களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதற்கு பிறகு லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். 1980 காலகட்டத்தில் இவரது கல்லூரி கார நண்பர் மணிவண்ணன் சினிமாவிற்குள் நுழைந்தார். மணிவண்ணன் வந்ததற்கு பிறகு அவர் சத்யராஜை வைத்து 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். அதில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது. அமைதிப்படை நாகராஜசோழன் போன்றவை அடங்கும். 2000 காலகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் சத்யராஜ். இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தது தான். எந்த கதாபாத்திரமானாலும் சிறப்பாக நடிக்க கூடியவர் சத்யராஜ்.
சத்யராஜுக்கு இரண்டு குழந்தைகள் திவ்யா மற்றும் சிபிராஜ். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நாயனாக நடித்து இருக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சத்யராஜ் அவர்களின் மூத்த மகள் திவ்யா திமுகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அந்த கட்சியில் இணைந்து கொண்டார். நான் எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செய்வேன் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

பிறகு நேற்று விஜய் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு அங்கு சென்றார். அப்போது விஜயின் போட்டோவை சத்யராஜ் மகனின் சிபிராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது தெரிகிறது. ஏற்கனவே சத்யராஜ் ஒரு பெரியாரிஸ்ட் ஆவார். அவரது மூத்த மகள் திமுக இளைய மகன் த வெ க–வா சத்யராஜ் வீட்டிற்குள்ளேயே பெரிய குழப்பம் இருக்கும் போலிருக்கிறது என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
