மூத்த மகனை தொடர்ந்து இளைய மகனுக்கு திருமணம் முடிக்கும் நாகார்ஜுனா.. மணப்பெண் யார் தெரியுமா..?

By Nanthini on தை 21, 2025

Spread the love

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவை காதலித்து இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் ஒரே மகன் தான் அகில் அக்கினேனி. நாகார்ஜுனாவுக்கு அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Happy Birthday Nagarjuna Akkineni: Top Moments With Family

   

இதனைத் தொடர்ந்து நடிகை சோபிதா துலிபலாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நாகார்ஜுனாவை போலவே அவருடைய மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு தற்போது 30 வயதாகும் நிலையில் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ட்ஜிம் என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

   

Age is just a number, I still feel young at heart: Nagarjuna Akkineni | Telugu Movie News - Times of India

 

இவர்களுடைய நிச்சயதார்த்தத்திற்கு பிறகு, நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட பதிவில் “ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

நாக சைதன்யா தம்பி அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்.. ஹேப்பி தகவலை பகிர்ந்த நாகார்ஜுனா | Akhil Akkineni Engaged to Zainab Ravdjee: Nagarjuna Shares Happy News - Tamil Oneindia

நாகர்ஜுனா இளைய மகன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் ஒரு இஸ்லாமிய பெண். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஆவார். இவர்களுடைய திருமணம் வருகின்ற மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அகிலின் மூத்த சகோதரர் நாகசைதன்யாவை போலவே இவரும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.