சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி ஏமாற்றி பல் வலிக்குது என்று ஹாஸ்பிடலுக்கு சென்றார். ஆனால் ஸ்ருதி உண்மையிலேயே டாக்டரிடம் கூட்டிட்டு போய் அவர் பல்லை பிடுங்கி விட்டு கூட்டிட்டு வந்தார். சந்தேகப்பட்டு முத்து மீனாவிடம் பார்லர் அம்மா ஏதோ உண்மை மறைக்கறாங்க என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முத்து தனது நண்பர்களுடன் பார்ட்டி என்று கூறிவிட்டு குடித்து விடுகிறார். முதலில் மீனாவிடம் போன் செய்து பர்மிஷன் கேட்கிறார். மீனா குடிக்கக்கூடாது என்று சொல்லியும் அவர் கேட்காமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். உடனே முத்துவுக்கும் மீனாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. நான் சொல்ல சொல்ல கேட்காம நீங்க குடிச்சிட்டு வந்துட்டு இப்படி இருக்கீங்களே என்று கோபப்படுகிறார். உடனே முத்து மாடிக்கு தூங்க போறேன்னு சென்று விடுகிறார்.
அடுத்ததாக ரோகினியும் மனோஜூம் ரூமில் இருக்கின்றனர். அப்போது என்ன ரோகினி பல்லு வலிக்குதா என்று மனோஜ் கேட்கிறார். பின்ன பல்ல புடுங்குனா வலிக்காதா என்று கூறிவிட்டு அவர் பாத்ரூம் செல்கிறார். இதற்கிடையில் ரோகினி போனுக்கு ஒரு போன் வருகிறது. அந்த போனில் ஒருவர் நான் பெருங்களத்தூர் இருந்து பேசுறேன் பத்தாம் தேதிக்குள்ள வாடகை தரணும்னு சொன்ன நீ வாடகை தரவே இல்லையே ஒழுங்கா வாடகை அனுப்பு என்று பேசுகிறார். உடனே மனோஜ் யாருங்க நீங்க யாருக்கு போன் பண்ணி இருக்கீங்க என்று கேட்கிறார். இது ரோகிணியோட நம்பர் தான அப்ப ரோகிணி கிட்ட வாடகை அனுப்புங்கன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.
பாத்ரூமில் இருந்து வந்த ரோகினி இடம் மனோஜ் யார பெருங்களத்தூர்ல வாடைக்கு வச்சிருக்க வாடகைக்கு கேக்குறாங்க என்று கேட்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த ரோகினி என் பிரண்டு ஒருத்தியை நாங்க குடி வச்சிருக்கேன் அவ வேலைக்கு போற வரைக்கும் ரெண்டு மாசமா நான் தான் வாடகை கொடுக்கிறேன் அவ வேலைக்கு போன உடனே எனக்கு தரேன்னு சொல்லிட்டா என்று கூறுகிறார். உடனே மனோஜ் என்ன நீ வர வர ஒரு விஷயமும் நீ என்கிட்ட சொல்லவே மாட்டேங்குற என்கிட்ட எல்லாமே மறைச்சுகிட்டு இருக்க அப்போ உன் ஹஸ்பண்டா எனக்கு என்ன தான் மரியாதை என்று கூறுகிறார்.

மனோஜ் இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல மனோஜ் அதுதான் நான் சொல்லல என்று ரோகினி சமாளிக்கிறார். இல்ல ரோஹினி நீ சிட்டிகிட்ட கடன் வாங்குனதா சொல்லல இப்ப இந்த விஷயம் சொல்லல இன்னும் எத்தனை விஷயம் என்கிட்ட சொல்லாம இருக்க என்று கோபப்பட்டு அவரும் தூங்குவதற்காக மாடிக்கு சென்று விடுகிறார். அடுத்ததாக ரவியும் சுருதியும் சண்டை இட்டு கொள்கின்றனர். ஸ்ருதி போன் செய்து ரவி எடுக்கவில்லை நான் ஒர்க் பிஸி என்று கூறுயாதால் சண்டையிட்டு அவரும் மாடிக்கு சென்று விடுகிறார். அண்ணன் தம்பி மூன்று பேரும் மாடியிலிருந்து மனைவிமார்கள் செய்யும் தொல்லைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசாம சிங்கிளாகவே இருந்து விடலாம் போலிருக்கிறது என்று பேசுகிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
