96 நாட்கள் இந்தி பிக்பாஸை கலக்கிய ஸ்ருதிகா.. அன்போடு வரவேற்ற குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ.!

By Nanthini on தை 17, 2025

Spread the love

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை விட ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதன்படி தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி பிக்பாஸை வழக்கம் போல சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிரபலமான ஸ்ருதிகா அர்ஜூன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற இவர் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

முதல் தென்னிந்திய நடிகை... 90 நாட்கள் சம்பவம்... இறுதி வாரத்தில் ஸ்ருதிகா  அர்ஜூனுக்கு நடந்த அநீதி? | shrutika arjun eliminated from biggboss hindi  season 18

   

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சினிமாவை வீட்டை விலகிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது டிரேட்மார்க் சேட்டைகளால் சல்மான் கானையும் கவர்ந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கேயும் உருவாக்கி விட்டார். பிக்பாஸ்ஹே சுருதிஹாவின் பேனாக மாறிவிட்டார். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் அனைவரும் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

   

Bigg Boss Shrutika Arjun Elimination : பறி போன டைட்டில் வின்னர் வாய்ப்பு...  இந்தி பிக் பாஸ் ஷோவிலிருந்து வெளியேறினார் ஸ்ருதிகா அர்ஜூன்! | Times Now  Tamil

 

90 நாட்களைக் கடந்து ஸ்ருதிகா அர்ஜுன் பலமான போட்டியாளராக விளையாடி வந்தார். அடுத்த வாரம் ஃபைனல் இருக்கும் நிலையில் இந்த வாரம் மூவர் மட்டுமே நாமினேஷனில் இருந்தார்கள். அதில் ஸ்ருதிஹாவும் இருந்தார். அவரோடு இருந்த மற்ற பிரபலங்கள் ஹிந்தியின் பிரபலம்  என்பதால் இது ஸ்ருதிஹாவிற்கு கடுமையான நாமினேஷன் ஆகவே இருந்தது. தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக ஸ்ருதிஹாவுக்கு வாக்கு கேட்டு  வீடியோ வெளியிட்டு வந்தார்கள்.

Shrutika Bigg Boss: இந்தி பிக் பாஸில் அண்ணனைப் பற்றி பேசி கதறி அழுத ஸ்ருதிகா..  இவருக்கு இப்படியொரு பிளாஷ்பேக்கா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Times Now  Tamil

ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கமிஷனரில் மக்களின் வாக்கு அடிப்படையில் ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இருப்பினும் பெரிய பிரபலமாக இல்லாமல் தோல்வி நடிகையாக இருந்தாலும் தன்னுடைய டிவி புகழை மட்டுமே வைத்துக் கொண்டு உள்ளே சென்ற இவர் 90 நாட்கள் தன்னுடைய ஆதிக்கத்தால் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தான் வெளியேறி இருக்கிறார் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Shrutika Bigg Boss: இந்தி பிக் பாஸில் போட்டியாளராக களகிறங்கிய தமிழ் நடிகை  ஸ்ருதிகா.. அசந்துபோன சல்மான் கான்! | Times Now Tamil

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தால் ஸ்ருதிகா, தன் பெற்றோரை சந்திக்க அவர்களுடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அம்மாவை கட்டி அணைத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டார். குடும்பத்தில் இருந்த சக உறவினர்களுடனும் தன் அன்பை பரிமாறிக்கொண்ட ஸ்ருதிகா இறுதியாக தனக்கு பிடித்த பிரியாணியை அம்மா சமைத்து தர அதனை சாப்பிட்டு மகிழ்ந்தார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.