சினிமாவில் இருந்து விலகி இதுதான் பண்ண போறேன்.. ரசிகர்களுக்கு திடீரென ஷாக் கொடுத்த ஜெயம் ரவி..!

By Nanthini on தை 17, 2025

Spread the love

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட தொகுப்பாளர் மற்றும் இவரது அண்ணன் மோகன் ராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் ஆவார். அதன் மூலம் ஜெயம் ரவிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயம் ரவி 2002 ஆம் ஆண்டு தனது அண்ணன் இயக்கிய ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இனி "ஜெயம் ரவி" என்று அழைக்க வேண்டாம் - ரவி மோகன்| Don't call me "Jayam Ravi"  anymore - Ravi Mohan

   

அதிலிருந்து அவரை ஜெயம் ரவி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, தாஸ், பூலோகம், தனி ஒருவன், எங்கேயும் காதல், தில்லாலங்கடி, பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, உனக்கும்  எனக்கும்  என  பல வெற்றி  திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ஜெயம் ரவி. அதற்கு அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

   

ஜெயம் ரவி எடுத்த திடீர் முடிவு

 

சமீபத்தில் இவருடைய நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ஆக காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்த நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் ஜெயம் ரவி தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொள்வதாக அறிவித்தார். பழையன கழிதலும் புதியன புகுதலும் என குறிப்பிட்டு தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொண்டார்.

இனி 'ஜெயம் ரவி' வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம்.. ஜெயம் ரவி வெளியிட்ட  அறிக்கை

இந்த நிலையில் விஜய் நடிப்பை விட்டு அரசியலுக்குச் செல்கிறார், அஜித் கார் ரேஸ் பக்கம் திரும்பி விட்டார், அதுபோல நீங்கள் சினிமாவுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என சமீபத்திய பேட்டியில் ரவி மோகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தான் இமயமலையில் செட்டில் ஆகி விடுவேன் என்று அவர் ஒரே வரியில் பதில் கூறி இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து அறிவித்து விட்ட அவர் தற்போது இப்படி ஒரு பதில் கூறி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.