விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருக்கும் நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர்.

போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க்கும் நிறைவடைந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார். ரயான் பைனலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் முந்தைய சீசன்களை போலவே ஷோவின் இறுதிக்கட்டத்தில் முன்பு எலிமிமினெட் ஆன போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதாவது சாச்சனா, தர்ஷாகுப்தா ,அர்னவ், சிவகுமார், ரவீந்தர் சந்திரசேகர், ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் தான் மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.

இவர்கள் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களுடன் மோத உள்ள நிலையில், ஒருவேளை வைல்டு கார்டு போட்டியாளர்கள் வெற்றிபெற்றால் இருவர் ரீபிலேஸ் செய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ரவீந்தர் சக போட்டியாளர்களுடன் மக்களுடைய கருத்து குறித்தும் வோட்டிங் பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக் பாஸ், நீங்கள் விதிகளை மீறிவிட்டதால் வெளியேற்றப்படுவதாக அறிவிக்க, ரவீந்தர் கண்ணீர் விட்டு கலங்கி அழுதிருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
