மேடையில் ஏ.ஆர் ரகுமான் பற்றி பேசிய ஜெயம் ரவி.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. இதுதான் காரணமா..?

By Nanthini on தை 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த தற்போது இளம் அரசியல்வாதியாக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஸ்டாலின். இவர் தமிழில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர் பெரியளவு திரைப்படங்களை இயக்காமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸ் ஒன்றை இயக்கியிருந்தார்.

   

தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் கிருத்திகா ஸ்டாலின். தமிழக முதல்வரின் மருமகளும் எம்எல்ஏ மற்றும் நடிகரின் மனைவியுமான கிருத்திகா திரை துறையில் இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் மிகவும் கவனமாக பார்த்து வருகிறார். சினிமாவில் பாடல்கள், ஆல்பம் போன்றவற்றை இயக்குவதில் பிஸியாக இருந்து வரும் கிருத்திகா தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவிக்க்கு  ஜோடியாக நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.

   

 

ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை தழுவிய நிலையில் இந்தத் திரைப்படம் ஜெயம் ரவி திரைப்பயணத்தில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஜெயம் ரவி, நித்யா மேனன் மற்றும் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் ஜெயம், ஏ ஆர் ரகுமானுடன் ஒரு படம் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்டேன்.

அதற்காக 20 வருடங்கள் காத்திருந்தேன். நான் ஆசைப்பட்டதற்காக கடவுள் எனக்கு நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்று பேசிய ஜெயம்ரவி படங்களின் பெயரை குறிப்பிடும்போது எங்கேயும் காதல் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த நிலையில் தெரியாமல் எங்கேயும் காதல் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்தார் என்று மேடையில் உளறி விட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஜெயம் ரவியை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.