Petrol விலை ரூ 20 குறைகிறது… எப்படி… மத்திய நிதி அமைச்சர் கூறியது என்ன…?

By Meena on ஜனவரி 8, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு பொருள் பைக் தான். அதுமட்டுமல்லாமல் முந்தைய காலத்தில் ஏதாவது ஒரு வீட்டில் தான் கார் இருக்கும். இப்போது நடுத்தர மக்கள் அனைவர் வீட்டிலும் கார் இருக்கிறது. கார் வைத்திருப்பதை கெத்து தான் என்று நினைக்கிறார்கள். லோன் போட்டாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என்று தான் மக்களின் மனப்பான்மையாக இருக்கிறது. இந்த பைக் கார் வாங்குவர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது இந்த Petrol விலை உயர்வு தான். தற்போது இந்த பெட்ரோலின் விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். அதை பற்றி விவரங்களை இனி காண்போம்.

   

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் Petrol விலை ரூ. 20 வரை குறையுமென்று அறிவித்திருக்கிறார். இனி வரும் காலங்களில் புதுவித எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும். இது கணிசமாக Petrol விலையை குறைப்பதற்கு உதவும் என்று கூறி இருக்கிறார். மேலும் இந்த எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 20 குறைவாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

   

டொயோட்டா போன்ற கார் நிறுவனங்கள் ஏற்கனவே எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் எரிபொருளின் விலை லிட்டருக்கு ரூபாய் 25 தான். மேலும் எத்தனாலால் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து விரைவில் பல நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். இந்த எத்தனால் கலந்த பெட்ரோல் ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் செலவை பெருமளவு குறைக்கும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் 2030 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதம் எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இது பெட்ரோல் மற்றும் டீசலின் தேவையை கணிசமாக குறைக்கும். இதனால் நாளடைவில் பெட்ரோலின் விலை அதிகமாக குறையும். தற்போது முதற்கட்டமாக ரூபாய் 20 குறையும் என்று கூறியிருப்பது மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்திருக்கிறது. ஆனால் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.