நடிப்பு கை கொடுக்கல அடுத்தது இதுதான்… மனம் நொந்து பிரபுதேவா எடுத்த முடிவு…

By admin on தை 7, 2025

Spread the love

பிரபுதேவா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். ரப்பர் போல் தன் உடம்பை வளைத்து சிறப்பாக நடனம் ஆடுவதால் இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபலமாக அழைக்கின்றனர். ஆரம்பத்தில் பின்னணி நடன கலைஞராக “அக்னி நட்சத்திரம்” போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரபுதேவா.

   

அடுத்ததாக “இதயம்” திரைப்படத்தில் முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். 1990களில் சங்கர் இயக்கிய “காதலன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, வானத்தை போல என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து 1990 மற்றும் 2000 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் பிரபுதேவா.

   

2000கள் காலகட்டத்திற்கு பிறகு விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோர் வருகையால் பிரபுதேவாவின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை. அதனால் நடன இயக்குனராக சினிமாவில் பணியாற்றி வந்தார். இயக்குனராகவும் ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார் பிரபுதேவா. சமீபத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பிரபுதேவா நடித்த பல திரைப்படங்கள் அவ்வளவாக எடுபடவில்லை. தோல்வியை சந்தித்தது.

 

இந்நிலையில் தான் நடிகராக நடிக்கும் எந்த ஒரு படமும் கைகூடவில்லையே வெற்றி பெறவில்லையே என்று நினைத்த பிரபுதேவா படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதற்கான கதையையும் தயார் செய்து வருகிறாராம். விரைவில் அவர் புது படத்தை இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவுகிறது.