சாவு-ன்னு கதைல இருந்தாலே என் பெயரை எழுதிடுவாங்க போல… இனிமே ஒரு முடிவு பண்ணிட்டேன்.. ஆதங்கத்தை கொட்டிய கலையரசன்..!

By Soundarya on தை 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார்.  2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார்.

   

இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர்.பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் தீபன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

   

 

அதனைத் தொடர்ந்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமீபத்தில் வாழை படத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடைத்தை பிடித்தார். தற்போது மெட்றாஸ்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மெட்ராஸ்காரன்’ பட நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில், ஒரு படத்திற்கு கதை எழுதும் போதே ஒரு கதாபாத்திரம் சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் போல, இனி நான் இரண்டாம் நடிகராக நடிக்க மாட்டேன் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்.இங்க நான் ஹெல்தியா இல்ல. இனிமே இதை பண்ணமாட்டேன் என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.