கேரளாவை போல மாறிய சென்னை… பயன்பாட்டுக்கு வந்த மிதவை படகு உணவகம்…

By Meena on ஜனவரி 7, 2025

Spread the love

இந்தியாவிலேயே மிகவும் அழகான இயற்கை வளம் நிறைந்த நாடு என்றால் அது கேரளா தான். கேரளாவில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் படகு வீடு. இது கேரளாவின் முக்கியமான சுற்றுலா பயணிகள் வரவுக்கு காரணமாக இருக்கிறது. இந்த படகு வீட்டில் தண்ணீரில் பயணம் செய்து கொண்டே தங்கிக் கொள்வது, சாப்பிடுவது என சுற்றுலா பயணிகள் விரும்பி பொழுதைப் போக்குவார்கள். தற்போது கேரளா போல் தமிழ்நாட்டின் சென்னையும் மாறி இருக்கிறது.

   

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் புதிய படகு இல்லத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த படகில் ஒரு சமையலறை, சேமிப்பு பகுதி, ஓய்வறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த மிதக்கும் கப்பல் 60 Horse Power உடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றத்தை பார்க்கும் போது நாம் கேரளாவில் இருக்கிறோமா சென்னையில் இருக்கிறோமா என்று குழம்பும் வகையில் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.

   

சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லோரும் சற்று இளைப்பாறுவதற்கு பல இடங்களை தேடி செல்வார்கள். தற்போது இந்த மிதக்கும் உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது சென்னை மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இந்த இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜனவரி 6 முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் சென்னை வாழ் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை முட்டுக்காட்டில் மிதக்கும் படகுகள், மோட்டார் படகுகள், வேகப்படகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் இருக்கின்றது.

 

ஏற்கனவே சென்னை முட்டுக்காடு பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படகில் பயணம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்த படகு இல்ல மிதக்கும் உணவகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த உணவகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மிதக்கும் உணவகம் தொடங்கப்பட்டது இதுதான் முதல் முறை. முழு கப்பலிலும் ஏசி வசதி பொருத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு வசதியான மிதந்து கொண்டே சாப்பிடக்கூடிய ஒரு அனுபவத்தை இது வழங்குகிறது. கீழ்த்தத்தில் உணவகமும் முதல் தளம் திறந்த அமைப்பை கொண்டுள்ளது. பார்வையாளர்கள் உயரமான நிலையில் இருந்து நீர் நிலையை ரசித்து கொள்ளலாம். இந்த புதுவித மிதவைக் கப்பலால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து அங்கு செல்ல தொடங்கி இருக்கின்றனர்.