நம் முன்னோர் மற்றும் தாத்தா பாட்டி காலகட்டத்தில் ஒரு சரியான வாழ்க்கை முறையை வாழ்ந்தார்கள். இந்த நேரத்தில் தான் தூங்க வேண்டும் இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு முறையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எதுவுமே ஒழுங்கு இல்லை. சரியான உணவு சாப்பிடுவதில்லை சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை சரியான நேரத்தில் தூங்குவதில்லை. தொழில்நுட்பம் வளர்ந்தது தான் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் ஊட்டச்சத்து அல்லாத தேவையில்லாத ஃபாஸ்ட் புட்டுகளை உண்ணுவது, இரவு நேரத்தில் கண்டபடி ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவுக்கு மேல் தூங்குவது என்ற பழக்கத்தை தான் பெரும்பாலானோர் வைத்திருக்கிறார்கள். இப்படி நீங்கள் தினமும் நள்ளிரவுக்கு மேல் தூங்கும் பழக்கத்தை வைத்திருந்தால் அதனால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.
தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் மறுநாள் நாம் அன்றாட பணிகளை சிரமம் இல்லாமல் செய்ய முடியும். சிலர் இரவு 12 மணிக்கு தூங்கி காலை 9, 10 மணி வரைக்கும் தூங்குவது என நேரத்தை மாற்றி செய்கிறார்கள். இவ்வாறு தூங்குவது தவறுதான். அதிகபட்சமாக 10 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை தூங்குவது தான் சரியான நேரம் என்று கூறுகிறார்கள். சிலர் இரவு 8 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு விழித்துக் கொள்வார்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு பழக்கம். ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் 10 மணியிலிருந்து ஆறு மணி வரை தூங்குவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
இந்த சரியான முறையை மாற்றி நள்ளிரவில் தூங்கி காலையில் நேரம் கழித்து எழுந்திருப்பது போன்ற நள்ளிரவில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் உங்களது உடல் எடை வெகு விரைவில் அதிகரித்து விடும். நள்ளிரவில் தூங்கும்போது உங்களுக்கு பசி எடுக்கும். கண்டிப்பாக அப்போது இரவு உணவையும் சாப்பிட்டு நள்ளிரவில் ஒரு உணவை சாப்பிடும் போது கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும்.
அடுத்ததாக மன அழுத்தம் உண்டாகும். நள்ளிரவில் நேரம் கழித்து தாமதமாக தூங்கும்போது பதற்றம், கோபம், உண்டாகும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இப்படி நேரம் கழித்து நீங்கள் தூங்கி காலையில் நேரம் கழித்து எழும்பும்போது நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். என்னதான் செய்தாலும் உடல் ஒரு சோர்வு தன்மையுடனே இருக்கும். அதனால் நீங்கள் நள்ளிரவில் தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் இதுதான் சரியான நேரம் உடனே அதை மாற்றி விடுங்கள்.