அவருக்கு இருந்த ஒரே வருத்தம்னா அதுதான்… கணவர் குறித்து பேசிய விவேக்கின் மனைவி..!

By Soundarya on தை 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது விவேக் தான். தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக நமக்கு வழங்கி வந்தவர். இப்படி புகழ்மிக்க கலைஞரான விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார்.

#image_title

இவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.  இவர் இறந்ததற்குப் பிறகு திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் விவேக் குறித்து பல சுவாரசியமான நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.அப்துல் கலாமின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த விவேக் அந்த லட்சியம் நிறைவேறுவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார்.

   
   

 

விவேக் இருந்து மூன்று வருடங்கள் ஆகியும் இவரைப் பற்றிய நினைவுகள் ரசிகர்கள் மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை. நடிகர் விவேக் அருள் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தது மட்டுமே அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் விவேக் மனைவி அருள்ச்செல்வி சமீபத்தில் அளித்த பேட்டியில் கணவர் குறித்து பேசியுள்ளார்.

அதில், ஒரு படம் பெருசா இருந்ததுன்னா அதுல முதல்ல காமெடி சீனை தான் கட் பண்ணுவாங்க. அதுல நல்ல காமெடி சீன், பஞ்ச் மிஸ் ஆகிடும். அதுதான் வீட்ல வந்து வருத்தப்படுவாரு. ரிஜெக்சன் எதுவுமே வந்ததில்லை. ஏன்னா அவரு போயி எங்கேயும் வாய்ப்பு கேட்டதில்லை” என்று கூறியுள்ளார்.