baby

90ஸ் கிட்ஸ், மில்லினியல், Gen Z, Gen Alpha இனி இல்லை… இந்த வருடம் பிறக்கும் குழந்தைகள் வேற ரகம்…

By admin on தை 2, 2025

Spread the love

வாழையடி வாழையாக தலைமுறைகள் காண வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரையும் வாழ்த்துவார்கள். ஆனால் இப்பொழுது ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கிறார்கள். அப்படி 90ஸ் கிட்ஸ் அதற்கு பிறகு பிறந்த குழந்தைகள் என ஒவ்வொரு கிட்ஸ்க்கும் ஒவ்வொரு பேரை வைத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அழைத்து வருகிறார்கள்.

   

பொதுவாக கலாச்சாரம், சமூக வரலாற்று அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பிறப்பவர்களுக்கு ஒரே தலைமுறை பெயரில் அழைக்கின்றனர். 90’s கிட்ஸ்களை மில்லியனல்ஸ் எனவும் 1999 இல் இருந்து 2009 வரை பிறந்த குழந்தைகளை Gen Z எனவும் 2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகளை Gen Alpha எனவும் அழைத்து வந்தனர்.

   

இந்த Gen Alpha தலைமுறையினர் தான் தொழில்நுட்பம் சார்ந்த உலகத்திற்கு அடிமையாகி வளர்ந்து வருகின்றனர். சுமார் 200 கோடி பேர்கள் உடன் மிகப்பெரிய தலைமுறையாக இந்த ஜென் ஆல்ஃபா இருக்கிறது. இவர்கள் தான் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் தற்போது 2025 ஜனவரி 1 முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் Gen Beta தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன. 2039 டிசம்பர் 31 வரை பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இந்த Gen Beta தலைமுறைக்குள் வருவார்கள். இப்படி ஒவ்வொரு தலைமுறைகளுக்கும் பெயர் வைக்கும் முறை 1901-ல் இருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஜென் பீட்டா ஆகிய இந்த தலைமுறை ஏழாவது தலைமுறையாகும். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பன்முகத்தன்மையின் சிறப்பான பங்களிப்பு போன்றவற்றில் உயர்ந்தும் மிகவும் அட்வான்ஸான பல வளர்ச்சிகளுக்கு நடுவே இந்த ஜென் பீட்டா குழந்தைகள் வளர்வார்கள் என்று கருதப்படுகிறது.