ஒருவரின் அழகுக்கு அழகுக் கூட்டுவது முடி தான். மிகவும் அடர்த்தியாக கருப்பான வசீகரிக்கும் முடி இருப்பது என்பது விருப்பமாக இருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே இளநரை வந்துவிடும். அதனால் ஹேர் டை பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இளம்பெண்கள் ஸ்டைல்காக கலர் கலராக டை அடித்துக்கொள்வார்கள். இந்த ஹேர் டைனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆர்கானிக் ஹேர் டைகள் வரத்தான் செய்கிறது. ஆனால் இந்த ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதன் விவரங்களைப் பற்றி இனி காண்போம்.

தாங்களை கவர்ச்சிகரமாக காட்டுவதற்கு ஹேர் டை பயன்படுத்தும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்விரான்மென்டல் ஹெல்த் சயின்ஸ் நடத்திய ஆய்வில் ஹேர் டை மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்களில் உள்ள ரசாயனங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது மார்பக புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றனர். ஆய்வின்படி தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்தும் பெண்களில் மார்பக புற்றுநோயின் ஆபத்து ஒன்பது சதவீதம் முதல் 60% வரை அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். இளநரைக்கு டை அடிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் கலர் கலராக தங்கள் முடியை அழகு படுத்த டை அடிக்கிறார்கள். குறிப்பாக டார்க் கலர் ஹேர் டையின் பக்க விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
ஹேர்டைகள் பயன்படுத்தாத பெண்களுடன் ஒப்பிடும்போது ஹேர் ஸ்டைல்க்காக பண்ணப்படும் டை அடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து ஒன்பது சதவீதம் அதிகரிக்கிறது. ஐந்து முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கெமிக்கல் முறைப்படி ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களை பயன்படுத்தியும் கலரிங் செய்து கொள்பவர்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 30% அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த அழகுப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் தீங்கு விளைவிக்கும் எண்டோகிரைன் டிஸ்ர்ப்டிங் காம்பௌண்ட்ஸ் மற்றும் கார்சினோஜென்ஸ் போன்ற ரசாயனங்கள் இருக்கின்றன. இவை ஆரோக்கியத்தை பெரியதளவும் பாதிக்க கூடியது. இந்த இரண்டு ரசாயனங்களும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து, இனப்பெருக்க பிரச்சனைகள், புற்று நோய்கள், டிஎன்ஏவை சேதப்படுத்துவது போன்றவற்றை செய்கின்றது.

ஆரம்பத்தில் எந்த ஒரு பாதிப்பு தெரியாமல் இருந்தாலும் கூட போகப் போக அல்லது வயதாகும்போது இந்த ரசாயனங்களை பயன்படுத்தியாதாற்கான பக்க விளைவுகள் கட்டாயம் இருக்கும் என்று மருத்துவர்கள் ஆய்வில் தெரிவித்து இருக்கிறார்கள். எப்போதுமே இயற்கைக்கு மாறாக நாம் ஒரு விஷயத்தை செயற்கையாக செய்யும்போது அதனால் நாம் பல பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
