சேது படத்துக்கு நான் வாங்கிய சம்பளம் இதுதான்… அட என்னங்க சொல்றாரு இயக்குனர் பாலா?

By vinoth on தை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

   

பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.

   

 

பாலா இயக்கிய சேது திரைப்படம் பல போராட்டங்களைக் கடந்து 3 ஆண்டுகள் உருவாக்கப்பட்டு ரிலீஸானது. அந்த படம் ரிலீஸாவதற்கு முன்பு 100 முறைக்கு மேல் வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ‘இயக்குனரும் நடிகரும் நல்ல பேர் வாங்கிவிடுவார்கள். ஆனால் தயாரிப்பாளர் மாட்டிக் கொள்வார்’ என்று பயமுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்த படம் வெளியாகி ஹிட்டானது வரலாறானது.

இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் பாலா முதல் முறையாக சேது படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்து பேசியுள்ளார். அதில் “சேது படம் உருவானதே பல போராட்டங்களுக்கு இடையில். அதில் நான் எங்கு சம்பளம் வாங்குவது. அந்த படத்துக்கு எனக்கு சம்பளம் எல்லாம் கிடையாது. நான் முதல் முதலாக சம்பளம் வாங்கியது நந்தா படத்துக்குதான்” எனக் கூறியுள்ளார்.