இந்திய குடிமக்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி போன்றவை மிக முக்கியமானது. வங்கியில் கணக்கு தொடங்குவது, பள்ளி கல்லூரியில் சேர்வது முதல் பாஸ்போர்ட் வரை அனைத்திற்கும் அடிப்படையாக தேவைப்படுவது இந்த ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் தான். அதுபோல மத்திய அரசு தற்போது புதிதாக APAAR கார்டை கொண்டு வந்திருக்கிறது. இது என்ன இது யாருக்கு பயன்படும் என்பதை பற்றி இனி காண்போம்.

மத்திய அரசு தற்போது மாணவர்களுக்கு தனி ஐடி கார்டை தாரத் தொடங்கி இருக்கின்றது. அந்த ஐடி கார்டுகள் தான் APAAR ஐடி கார்டு ஆகும். தற்போது பல பள்ளிகளில் மத்திய அரசு இந்த APAAR கார்டை வழங்கி வருகிறது. மேலும் பெற்றோர் ஒப்புதல் உடன் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பிற அரசு அடையாள சான்றிதழ்களை இந்த APAAR ஐடியுடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
One Nation One Student ஐடி கார்டு என்ற முன்னெடுப்பின்படி இந்த APAAR கார்டு மத்திய அரசின் மூலம் வழங்கப்படுகிறது. இது மாணவர்கள் தங்களின் முழுமையான கல்வி பயணத்தை ஒழுங்கமைத்து டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திடீர் இடம் மாற்றம் செய்யும்போது இந்த APAAR கார்டு அந்த வகையில் மிகவும் உதவிகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி சார்ந்த அணைத்து பதிவையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும் இந்த APAAR கார்டு உதவுகிறது.
தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப்பதிவு Automated Permanent Academic Account Registry என்பதுதான் இந்த APAAR ஐடி கார்டின் விரிவாக்கம் ஆகும். இது மாணவர்களின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை ஆகும். ஆரம்ப நிலை முதல் உயர் கல்வி வரையிலான மாணவர்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த APAAR ஐடி கார்டில் மாணவர்களின் கல்வி, பட்டங்கள், ரிசல்ட், மாணவர்கள் பயன்பெறும் உதவித்தொகை திட்டங்களின் பெயர், அவர்களது முகவரி, ரத்தப் பிரிவு, இணை பாடத்திட்டம் மற்றும் விளையாட்டு சாதனைகள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் இதற்குள் அடங்கும்.

இந்த APAAR கார்டை நீங்கள் விண்ணப்பித்து வாங்குவதற்கு முதலில் ஆதார் மற்றும் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்க வேண்டும். அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட் அதாவது ஏபிசி வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இந்த APAAR கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்களுக்கான APAAR கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். அதற்குப் பிறகு பெற்றோரின் ஒப்புதல் படி உங்கள் கல்வி ஆவணங்கள் எல்லாவற்றையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
