தங்க மெடல் வாங்கி அப்பாவுக்கு பெருமை சேர்த்த மகன்.. பேரனின் வெற்றியால் செம ஹேப்பி மூடில் தாத்தா சத்யராஜ்..!

By Nanthini on மார்கழி 31, 2024

Spread the love

சினிமா நடிகர்களின் வாரிசுகள் ஒரு பக்கம் சினிமாவில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் ஹீரோயின்களாகவும் வந்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் சினிமாவே வேண்டாம் என மற்ற துறையில் அவர்கள் சாதனைகளை படைத்து வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஏற்கனவே நடிகர் மாதவனின் மகன், அஜித்தின் மகன் என பல பிரபலங்களின் குழந்தைகள் மற்ற துறைகளில் சாதித்து வருகிறார்கள். அதன்படி தற்போது சத்யராஜின் பேரனும் சிபி சத்யராஜ் மகனும் தற்போது ஒரு சாதனை செய்துள்ளார்.

sathyaraj sibi sathyaraj

   

அதாவது டோக்வாண்டோ என்ற தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்று இரண்டு பதக்கங்களை சிபிராஜின் மகன் பெற்றுள்ளதாக பூரிப்புடன் அவருடைய அப்பா சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் சிபிராஜின் மகன் தீரன் கொல்கத்தாவில் நடைபெற்ற எட்டாவது இந்திய TAI OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் என சத்யராஜ் பேரன் இரண்டு மெடல்களை வாங்கி அப்பா மற்றும் தாத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

   

sathyaraj sibi sathyaraj

 

அப்பா சத்யராஜ் போலவே தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறிய சிபிராஜ் கடந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பள்ளி படிப்பில் அதிக ஆர்வம் காட்டி வரும் மூத்த மகன் தீரன் தற்போது தற்காப்பு பயிற்சியிலும் தங்கம் வென்று தனது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்தியுள்ளார்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sibi Sathyaraj பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sibi_sathyaraj)