இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். இவர் இந்தியாவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை ஏற்படுத்தியவர். இந்தியாவுக்காக மன்மோகன் சிங் அவர்கள் செய்த சாதனைகள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

அரசியலில் இருந்து கொண்டு அநாகரிமாக பேசாமல் வெறுப்பை விதைக்காமல் நாகரீகமாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மன்மோகன் சிங். பஞ்சாப் மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் மன்மோகன் சிங். பெஷாவாரில் தனது பள்ளி படிப்பை முடித்த மன்மோகன் சிங் சிறுவயதில் இருந்தே திறமையான மாணவராக இருந்துள்ளார். அமிர்தசரத்தில் உள்ள இந்து கல்லூரி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் மன்மோகன் சிங்.
பிறகு ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் படிப்பை படித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார் மன்மோகன் சிங். டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசரியாக பாடம் நடத்தி இருக்கிறார் மன்மோகன் சிங். ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராகவும், நிதி அமைச்சகத்தின் செயலாளராகவும், மோடியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார் மன்மோகன் சிங்.
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களில் உன்னிப்போடும் முனைப்போடும் செயல்பட்டவர் மன்மோகன் சிங். இவர் ஏற்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக சர்வதேச அளவில் முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டார். கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக மன்மோகன் சிங் திகழ்ந்தார்.
1991 ஆம் ஆண்டு இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. அப்போது நெருக்கடியான சூழலில் தான் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார். தனது பலதரப்பட்ட திட்டங்களால் இந்தியாவை பொருளாதார ரீதியாக மேற்கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். 2004 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார்.

அவை தகவல் அறியும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலைத்திட்டம், இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை ஏற்படுத்தியது இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியது. 10 ஆண்டு காலமாக பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் மக்களுக்கு பயனுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார். அவரது சாதனைகள் கணக்கிட முடியாதவை. இந்திய மக்கள் மனதில் ஒரு நல்ல பிரதமராக நிலையாக நிற்பவர் மன்மோகன் சிங்.
