இப்போ தமிழ் சினிமாவுல ட்ரண்ட்டா இருக்கும் ரெண்டு விஷயங்கள் மங்காத்தா படத்துலதான் தொடங்குச்சு.. என்ன தெரியுமா?

By vinoth on மார்கழி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.

   

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அவரை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதில் ஒன்றில் கார்த்தியும் மற்றொன்றில் சூர்யாவும் நடித்தனர். சூர்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

   

 

அதனால் அவருக்கு அதன் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதன் பிறகு சென்னை 28 பாகம் இரண்டு எடுத்து அதன் பிறகு மாநாடு என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த பின்னர்தான் அவருக்கு கோட் பட வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “இப்போ பெரிய படங்களுக்கு எல்லாம் ப்ரமோஷன் வீடியோ வெளியிட்டு அறிமுகப்படுத்துறாங்க. ஆனா அத ஆரம்பிச்சு வச்சதே நான்தான். மங்காத்தா படத்துக்காக அஜித் சார வச்சு ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டோம். அதுக்கப்புறம் இப்போ எல்லாரும் அத பண்றாங்க.” எனக் கூறினார்.

ஆனால் இன்னொன்றை அவர் சொல்ல மறந்துவிட்டார். இப்போது படங்களுக்கு டீசர் வெளியிடுவது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் மங்காத்தா படத்தில்தான் முதல் முதலாக டீசர் என்ற ஒன்றை வெளியிட்டு அந்த ட்ரண்ட்டையும் வெங்கட்பிரபு தொடங்கி வைத்தார்.