விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார்.

#image_title
மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கல் மட்டுமே உள்ளது.

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

இந்த நிலையில், போட்டியாளர்களின்குடும்பத்தார் வீட்டிற்குள்ளே வருகிறார்கள். அந்தவகையில் இன்றைய புரோமாவில் இன்று சொந்தர்யாவின் best friend முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் விஷ்ணு வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து சௌந்தர்யா WillYouMarryMe என்று விஷ்ணுவிடம் புரொபோஸ் செய்கிறார். இந்த புரோமோ வைரளாகி வருகிறது.
