காதலன் அருணை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனா… என்ன அட்வைஸ் குடுத்தாங்க தெரியுமா..?

By Soundarya on டிசம்பர் 27, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்ட நடிகை அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டிலை வென்றது அதுதான் முதல் முறை. பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனாவும் டிவி சீரியல் நடிகரான அருண் பிரசாத் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

   
   

#image_title

 

அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே தான் ஒரு பெண்ணுடன் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் வெளியே சென்றதும் திருமணம் நடைபெறும் எனவும் அருண்பிரசாத் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலை ரசிகர்கள் ஏறத்தாழ உறுதி செய்தனர். இப்படியான நிலையில் அருண் பிரசாத் கேமரா முன்பு வந்து நின்று தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

#image_title

இந்நிலையில் போட்டியார்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும் பிரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அருணின் பெற்றோர் வந்த நிலையில் தற்போது அவருடைய காதலி அர்ச்சனா வீட்டிற்குள் வந்துள்ளார். அவர்களின் காதலை தெரிவித்துள்ளார்கள். மேலும் அர்ச்சனா அருணுக்கு சில அட்வைஸ்களும் கொடுத்துள்ளார். இந்த புரோமோ வெளியாகியுள்ளது.