தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார். கல்லூரி படிக்கும்போதே மேடை நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படங்களை இவர் நிகழ்த்தினார். இவருடைய தந்தை கஜராஜ் முண்டாசுப்பட்டி மற்றும் கபாலி போன்ற திரைப்படங்களில் பல துணை வேடங்களில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது வரை திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் ஒருவராக உருவெடுத்துள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பீட்சா:
கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் தான் பீட்சா. திகில் திரைப்படமாக உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலரும் துணை வேடத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜிகர்தண்டா:
அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு குற்றவியல் நகைச்சுவை திரைப்படமாக வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த நிலையில் எஸ் கதிரேசன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் லட்சுமிமேனன் உடைத்த பலரும் நடித்திருந்தனர்.

இறைவி:
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த நிலையில் இப்ப படத்தில் எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

மெர்குரி:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படமான வசனமே இல்லாத இந்த படத்தில் பிரபுதேவா, சனந்த், ரம்யா நம்பீசன் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பேட்ட:
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி, சிம்ரன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜகமே தந்திரம்:
2021 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மகான்:
2022 ஆம் ஆண்டு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்த மகான் திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக வெளியானது. இதில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய இயக்கி 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரெட்ரோ:
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் பூஜா எட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதல் கலந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
