விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் விஷால். பின்னர் 2004 ஆம் ஆண்டு “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு “சண்டக்கோழி” பின்னர் திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை போன்ற ஆக்சன் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் விஷால். 2010 காலங்களில் புகழின் உச்சியில் இருந்தார் விஷால்.
பின்னர் பாண்டியநாடு, பூஜை, மருது, துப்பறிவாளன், இரும்புத்திரை, வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் விஷால். தற்போது இவர் அடுத்ததாக மார்க் ஆண்டனி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இது மட்டுமில்லாமல் துப்பறிவாளன் படத்தை தானே இயக்கி நடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இறுதியாக விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு மார்க் ஆண்டனி பாகம் 2 படத்தை இயக்கலாம் என்று விஷால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறியிருக்கிறார். ஆனால் அப்போது அந்த இயக்குனருக்கு அஜித்குமாரின் Good Bad Ugly படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உடனே விஷால் பெருந்தன்மையுடன், “அஜித் சார் படம் பண்ணும் வாய்ப்பு எல்லாம் எல்லாருக்கும் எளிதாக கிடைக்காது. உனக்கு கிடைத்திருக்கிறது முதல்ல அந்த படத்தை பண்ணு அதுக்கப்புறம் மற்றதை பாத்துக்கலாம்” என்று விஷால் கூறியிருக்கிறார். அதன்படி Good Bad Ugly படத்தை தற்போது முடித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும் ஆதிக்கிடம் அஜித் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் விஷால் கூறியது அவருக்கு தெரிய வரவே உடன் அஜித்குமார் நீங்க போய் மார்க் ஆண்டனி 2 படத்தை முடிச்சிட்டு வாங்க அதுக்கடுத்தது நாம் படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி ஆதிக் பரவிசந்திரனுக்காக விஷாலும் அஜித்தும் விட்டுக் கொடுத்து இருக்கின்றனர்.
