விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார்.

இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த வாரம் ரஞ்சித் வெளியேறிவிட்டார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது .

#image_title
அதாவது பிக் பாஸ் வீட்டில் 1 நாளைக்கு 50 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்துள்ளார். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் என்கிற கணக்கில் 75 நாட்கள் வீட்டில் இருந்துள்ள இவர் ரூ. 37 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். ஆனால், இதில் குறிப்பிட்ட சதவீதம் வரி போக, மீதம் அவருடைய சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
