ஒரே படத்தில் ரஜினி, தனுஷை இணைக்க திட்டம் போட்ட VP… அதுவும் The GOAT படத்திலா..?

By Soundarya on மார்கழி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கலந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார்.  இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   

இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.

   

#

 

கோட் படத்தின் முதல் பாதியும், 2-ஆம் பாதியும் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். சிவகார்த்திகேயன் டோனி ஆகியோர் கேமியோ ரோலில் அசத்தி இருப்பார். இந்நிலையில், வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில், TheGOAT இன் இரண்டாம் பக்கத்தை நான் முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு விவரித்திருக்கிறேன். அவருக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் நான் அதை இரட்டை வேடப் பொருளாகக் கூறவில்லை.. மகன் கேரக்டருக்கு தனுஷை போட நினைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.