தனது கணவர் ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள் அன்று குட் நியூஸ் சொன்ன சங்கீதா.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

By Nanthini on மார்கழி 22, 2024

Spread the love

இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன் சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆகிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்து இருந்தார். தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் காமெடி பீசாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் இவர் உண்மையில் மிகப் பெரிய கோடீஸ்வரர்.

Album - ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமண ஆல்பம் | Redin Kingsley Weds  Sangeetha

   

தமிழக அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளை விட அதிக பொருட்காட்சிகளை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். பொருட்காட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர் என்றால் பலராலும் இதனை நம்ப முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றார். படப்பிடிப்பு தளத்தில் கூட அடுத்தடுத்து போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கும் பிசியான இவர் தன்னை சாதாரணமாகத்தான் மற்றவர்களிடம் காட்டிக்கொள்கின்றார்.

   

அது என் குழந்தை இல்லை.. பணத்துக்காக கல்யாணம் பண்ணேன்!! வருத்தப்படும் ரெடின்  கிங்ஸ்லி மனைவி.. - விடுப்பு.கொம்

 

கடந்த வருடம் கூட சென்னையை எடுத்த தாம்பரத்தில் வெளிநாட்டில் பாலம் என்ற பெயரில் நடத்திய பொருட்காட்சியில் ஏராளமான வருமானம் ஈட்டினார். எந்த தொழிலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதில் சரியான மூளைக்காரர் என்று பெயர் வாங்கியவர் இவர்.  இவர் சுமார் 15 வருடமாக இந்த பிசினஸ் செய்து வருகின்றார். சினிமாவில் பார்ப்பதற்கு மட்டும் தான் காமெடி பீஸ். ஆனால் நிஜத்தில் இவர் பெரிய தொழிலதிபர் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நேற்று  தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சங்கீதா வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sangeetha.V🦋 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sangeetha.v.official)