இவனுக்கெல்லாம் எதுக்கு சினிமா.. எட்டி உதைத்த பிரபல நடிகர்.. மேடையில் கலங்கிய சமுத்திரக்கனி..!

By Nanthini on மார்கழி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றியை ருசித்தவர். திரைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிகனியை ருசித்தவர். இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது.

சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது..! – Kuttram Kuttrame

   

இதனைத் தொடர்ந்து அரசி மற்றும் இதோ பூபாலன் போன்ற சீரியல்களை இயக்கியது மட்டுமல்லாமல் ஜன்னல் மற்றும் மர்ம தேசம் போன்ற சீரியல்களிலும் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான அப்பா மற்றும் சாட்டை போன்ற திரைப்படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை திரைப்படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படி பல்வேறு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்திருந்தாலும் எப்போதும் மிகவும் எளிமையாகவே அனைவரிடத்திலும் பழகும் குணம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமானார்.

   

Samuthirakani acting more film in Telugu | தெலுங்கில் வளரும் சமுத்திரக்கனி

 

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரு.மாணிக்கம் என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாரதிராஜா, அனன்யா மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் இப்படம் அடுத்த வாரம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. நேற்று நடைபெற்ற படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி சினிமாவில் தான் சந்தித்த அவமானங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்பா' திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெற லஞ்சம் கொடுத்தேன்' -சமுத்திரகனி  பகிரங்கம்! | Actor and director samuthirakani shares his bitter experience  with censor board - kamadenu tamil

அதில், ஒல்லி நடிகர் ஒருவர் என்னை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒதுக்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு படத்தில் ஒரு காட்சியில் என்னை பிரபல ஹீரோவை வைத்து எட்டி உதைக்கும் காட்சியில் ஓங்கி ஒரே மிதி மிதித்து விடுங்கள், அவர் சினிமாவை விட்டு ஒரே அடியாக ஓடிவிடட்டும் என்று கூறினார். அந்த காட்சியில் அந்த ஹீரோ என்னை எட்டி உதைத்ததும் நான் எகிரி போல் எங்கேயோ விழுந்து விட்டேன். எல்லோரும் சிரிச்சாங்க. ஆனா நான் வைராக்கியமாக எப்படியாவது இங்கே நல்ல நடிகராக மாறிவிட வேண்டும் என்று நம்பினேன். பிறகு என்னை அன்று எட்டி உதைத்த அந்த ஹீரோவும் என்னை எட்டி உதைக்க சொன்ன அந்த நடிகரும் நண்பர்களாக மாறி என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க என்று சமுத்திரக்கனி உருக்கமாக பேசியுள்ளார்.