மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மம்தா மோகன் தாஸ். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக விளங்குகின்றார். இவர் முறையாக கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிலப்பதிகாரம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் ஓராண்டிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். விவாகரத்திற்கு பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் இவ்வாறு அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். தமிழிலும் விஷால் நடிப்பில் வெளியான இனிமை மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் மம்தா மோகன்தாஸ் பாடிய பாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்தில் இடம்பெற்ற “டாடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாருமில்லை” என்ற பாடலை யுவன் இசையில் மம்தா மோகந்தாஸ் அற்புதமாக பாடி அசத்தியிருப்பார்.

அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியான காளை திரைப்படத்தில் இடம் பெற்ற காளை காளை அடங்காத காளை என்ற பாடலை பாடியவர் மம்தா மோகன்தாஸ் தான்.

அடுத்து கோவா படத்தில் யுவன் இசையில் இடைவாழை என்ற ரொமாண்டிக் பாடலையும் மம்தா மோகந்தாஸ் பாடியுள்ளார்.
