ஒரு இயக்குனருக்காக எம்ஜிஆரை காக்க வைத்த ஏ.வி.எம்.. இறுதியில் ஒத்த வார்த்தையில் அனைவரையும் அசர வைத்த MGR..!

By Nanthini on மார்கழி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் காலம் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஒரு நடிகர் என்றால் அது எம்ஜிஆராக தான் இருக்க முடியும். சிறுவயதில் நாடக நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகராக உயர்ந்த பெருமைக்குரியவர். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சில சருக்கல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிறகு ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கிய எம் ஜி ஆர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

   

அந்த காலகட்டத்தில் பாக்கியராஜ் இயக்கிய நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவுக்கு எம்ஜிஆர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் தேதியை கேட்டுள்ளனர். அப்போது முதல்வராக இருந்த எம் ஜி ஆரும் அடுத்த வாரமே ஒரு நாளில் விழா வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

   

late former cm mgr speech in Mundhanai Mudichu function old video viral |  Flashback: பாக்யராஜின் முந்தானை முடிச்சு பலமுறை பார்த்த எம்ஜிஆர்.. என்ன  சொன்னார் தெரியுமா?

 

எம்ஜிஆர் கொடுத்த நாளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு விழாவை நடத்தும் வகையில் தேதியை மாற்றி கொடுக்குமாறு எம்ஜிஆரிடம் சென்று ஏவிஎம் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட எம்ஜிஆர் ஏன் என்று கேட்க, எங்கள் விழா அனைத்திலும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் தான் நன்றியுரை வழங்குவார், ஆனால் தற்போது அவர் கண் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால் அவரால் வர முடியாது, ஒரு மாதம் கழித்து விழா நடத்தினால் அவர் வர வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட எம்ஜிஆர் எல்லோரும் எனக்காக காத்திருப்பார்கள் நான் ஒரு இயக்குனருக்காக காத்திருக்க வேண்டுமா சரி என்று கூறிவிட்டு தேதியை மாற்றி கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் குறித்த நாளில் விழா நடக்க எஸ்.பி முத்துராமன் நன்றியுறையை வழங்கியுள்ளார். எம்ஜிஆரும் மனநிறைவோடு வந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்துள்ளார்.